கரையோர முதலைகள் பாசுரம் ஒன்றை கதை நாயகி ஸ்வப்னாவிடம் நாயகன் தியாகு சொல்வதாக வரும் பாடல் வாளால றுத்துச்சு டினும்ம ருத்துவன்பால் மாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால் மீளாத் துயர்தரினும் விற்றுவக்கோட் டம்மாநீ ஆளாவு னதருளே பார்ப்பன டியேனே நாயகி ஸ்வப்னா தியாகுவிடம் தான் சந்த்தித்த அவமானங்களையும் அதனால் ஏற்பட்ட வலியையும் வேதனையுடன் பகிரும் தருணம் ஒன்று காட்சியாக எழுதப்பட்டிருக்கும்..... அதற்கு தியாகு பதில் அளிப்பதாக வரும் விளக்கம் ஒவ்வொரு மனிதனும் தான் பெரும் அவமானங்களை எவ்வாறு எடுத்துக்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என எழுத்தர் பாலகுமாரன் அபாரமாக விளக்கியிருப்பர். பண்டைய காலத்தின் மருத்துவத்தில் உணர்வகற்றல் எனப்படும் அனஸ்தீசியா இல்லாமல் தான் சிகிச்சை பார்க்கப்பட்டது... உடலில் ஏற்படும் இரத்த கொப்பளங்களை அகற்ற மருத்துவன் கத்தியை தீயில் பழுக்கவைத்து அக்கத்தியால் கொப்பளங்களை வெட்டி எடுப்பார் , இக்கொடிய வலியை தரும் மருத்துவனை நோயாளி காதலிக்கிறான் . எனக்கு ஏற்பட்ட வலி மிகுந்த கொப்பளங்களை சரி செய்கிறாய் , என் வேதனைகளை வேரோடு அறுத்து எடுக்கும் மருத்துவன் மேல் காதல...