Skip to main content
கரையோர முதலைகள்
பாசுரம் ஒன்றை கதை நாயகி ஸ்வப்னாவிடம் நாயகன் தியாகு சொல்வதாக வரும் பாடல்
வாளால றுத்துச்சு டினும்ம ருத்துவன்பால்
மாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் விற்றுவக்கோட் டம்மாநீ
ஆளாவு னதருளே பார்ப்பன டியேனே
நாயகி ஸ்வப்னா தியாகுவிடம் தான் சந்த்தித்த அவமானங்களையும் அதனால் ஏற்பட்ட வலியையும் வேதனையுடன் பகிரும் தருணம் ஒன்று காட்சியாக எழுதப்பட்டிருக்கும்..... அதற்கு தியாகு பதில் அளிப்பதாக வரும் விளக்கம் ஒவ்வொரு மனிதனும் தான் பெரும் அவமானங்களை எவ்வாறு எடுத்துக்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என எழுத்தர்  பாலகுமாரன்  அபாரமாக விளக்கியிருப்பர்.
பண்டைய காலத்தின் மருத்துவத்தில் உணர்வகற்றல் எனப்படும் அனஸ்தீசியா இல்லாமல் தான் சிகிச்சை பார்க்கப்பட்டது... உடலில் ஏற்படும் இரத்த கொப்பளங்களை அகற்ற மருத்துவன் கத்தியை தீயில் பழுக்கவைத்து அக்கத்தியால் கொப்பளங்களை வெட்டி எடுப்பார், இக்கொடிய வலியை தரும் மருத்துவனை நோயாளி காதலிக்கிறான்.
எனக்கு ஏற்பட்ட வலி  மிகுந்த கொப்பளங்களை சரி செய்கிறாய், என் வேதனைகளை வேரோடு அறுத்து எடுக்கும் மருத்துவன் மேல் காதலாகிறது, என் துன்பத்தை நீ அறுத்து எடுத்து என்னை குணமாக்குகிறாய், என மருத்துவன் மேல் காதல் மலர்கிறது.

வாழ்க்கை ஒரு மருத்துவன், உனக்குளே ஏற்படும் இரத்த கொப்பளங்களை வலிக்க வலிக்க அது அறுக்கும்,  நோய்யுற்றவன் மருத்துவனை காதலிப்பது போல் வலியை அறுத்து எடுக்கும் வாழ்க்கையை நேசிக்க வேண்டும் என எழுத்தாளர் எழுதி முடித்து இருப்பார்.

Comments

Popular posts from this blog

என்னை பற்றி .....

புத்தகத்தை ஆர்வத்தில் படிக்க ஆரம்பிக்க , புத்தகம் படிப்பதையே    ஆரவமாய் எடுத்துக்கொண்ட குடும்பத்தில் பிறந்தவளுக்கு படிப்பது ஒன்றும் புதியதாக தோன்றாது. ஆனால் எனக்கு படிப்பதின்   மேல் எழுந்த ஆர்வம் சற்று விரைவிலேயே ஏற்பட்டு விட்டது என்று கூறலாம் . என் அம்மாவின் சேலையை பிடித்து பள்ளிக்கு சென்ற காலத்தில் பிணியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த நாட்கள் அவை.... மருந்துகளுக்குள் நாட்களை கழிக்க சிரமப்பட்டவளுக்கு அம்மா கொண்டுவந்து தந்தது  சற்றே வித்யாசமான ஒன்று ..... ஆம் பாலகுமாரன் எழுதிய "தொப்புள் கொடி" புத்தகம். எனக்கு இன்றும் நினைவில் உள்ளது , அவரின் பல வாக்கியத்திற்கு அர்த்தம் புரியாமல் அம்மாவை கேட்டு தொல்லை செய்த நாட்கள் என்றும் மறக்க முடியாதவை. அன்று ஆரம்பித்த வாசிக்கும்  பழக்கம் இன்று விருட்சமாய் என்னுள் வளர்ந்து இருப்பதை என்னால் உணர முடிகிறது . தற்பொழுது என்னால் நாள் ஒன்றிற்கு ஒரு  புத்தகமாவது படிக்காமல் இருக்க முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை . சில நேரங்களில் இந்த படிக்கும் பழக்கம் வரமாகவும் பல நேரங்களில் சாபமாகவும் நினைக்க தோன்றும் , ...