புத்தகத்தை ஆர்வத்தில் படிக்க ஆரம்பிக்க, புத்தகம் படிப்பதையே ஆரவமாய் எடுத்துக்கொண்ட குடும்பத்தில்
பிறந்தவளுக்கு படிப்பது ஒன்றும் புதியதாக தோன்றாது. ஆனால் எனக்கு படிப்பதின் மேல் எழுந்த ஆர்வம் சற்று விரைவிலேயே
ஏற்பட்டு விட்டது என்று கூறலாம்.
என் அம்மாவின் சேலையை பிடித்து பள்ளிக்கு சென்ற காலத்தில் பிணியால்
பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த நாட்கள் அவை.... மருந்துகளுக்குள் நாட்களை கழிக்க
சிரமப்பட்டவளுக்கு அம்மா கொண்டுவந்து தந்தது சற்றே வித்யாசமான ஒன்று .....
ஆம் பாலகுமாரன் எழுதிய "தொப்புள் கொடி" புத்தகம். எனக்கு
இன்றும் நினைவில் உள்ளது, அவரின் பல வாக்கியத்திற்கு அர்த்தம்
புரியாமல் அம்மாவை கேட்டு தொல்லை செய்த நாட்கள் என்றும் மறக்க முடியாதவை.
அன்று ஆரம்பித்த வாசிக்கும் பழக்கம் இன்று விருட்சமாய் என்னுள் வளர்ந்து
இருப்பதை என்னால் உணர முடிகிறது.
தற்பொழுது என்னால் நாள் ஒன்றிற்கு
ஒரு புத்தகமாவது படிக்காமல் இருக்க
முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
சில நேரங்களில் இந்த படிக்கும் பழக்கம் வரமாகவும் பல நேரங்களில்
சாபமாகவும் நினைக்க தோன்றும், காரணம் படிக்கும் பழக்கத்தின் மேல்
கொண்ட காதலால் பேருந்தின் பயணத்தின் போது பல நேரங்களில் நான் இறங்க வேண்டிய இடத்தை
தவறி விட்டிருக்கிறேன், தொடர் பணியால் படிக்க முடியாமல் போனால்
அன்று இரவு நான் தூக்கம் வராமல் தவித்த நாட்கள் மிக அதிகம். அந்த சமயங்களில் என் வாசிப்பின் மேல் ஏற்பட்ட தாபம், ஆசை, காதல் என அனைத்தையும் மூட்டை கட்டி விடலாமா
என்று சில நேரங்களில் என்ன கூடும்,
ஆனால் அது சற்றே கடினமான ஒன்று எனக்கு. ஒரு வேலை அவ்வாறு செய்து இருந்தால் என்றோ பித்து பிடித்திருக்கும்
எனக்கு.
நான் படித்த, ரசித்த, அனுபவித்த புத்தகத்தை பற்றியும் அதில் நான் காதல் கொண்ட
வார்த்தைகளின் வலிமையை பற்றியும் பகிர்ந்துக்கொள்ளும் வலைப்பதிவே இந்த
"படித்ததில் பிடித்தது".
என் முதல் வலைப்பதிவு என்பதால் நிச்சயம் பிழைகள் இருக்கக்கூடும்.
வாசிப்பாளர்கள் தங்களின் கருத்துகளையும் திருந்தங்களையும் தாராளமாக பதிவிடும்படி
கேட்டுக்கொள்கிறேன்
நன்றி
சாருமதி யோகலிங்கம்
Comments
Post a Comment